எலி தொல்லை தாங்க முடியலையா… இதோ சூப்பர் ஐடியா… இந்த ஒரு பொருள் மட்டும் பயன்படுத்தி பாருங்கள் போதும்.. ஓடி போய்விடும்..!!

உங்கள் வீட்டில் மூலை முடுக்கெல்லாம் எலி புகுந்து விட்டால், இந்த பொருட்களை பயன்படுத்தி அதனை எப்படி விரட்டி அடிப்பது என்பது குறித்து நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

மழைக்காலங்களில், பொதுவாக எலிகள் கதகதப்பான இடம் தேடி அலைந்து நம்முடைய வீடுகளில் தஞ்சம் புகும். இதனை பார்த்து விட்டு சாதாரணமாக எடுத்துக் கொண்டால், சில நாட்கள் சென்றதும் வீடு முழுவதும் குட்டிகள் போட்டு உங்கள் வீட்டிலேயே முழுவதும் குடியேறி விடும். அதன் பிறகு, அவைகளை விரட்டி அடிப்பது என்பது சற்று கடினமான காரியமாக இருக்கும்.

அதுமட்டுமின்று, எலியின் எச்சில், முடி எல்லாமே ஆபத்தை விளைவிக்க கூடியது தான். ஆம், எலியின் வாய் பட்ட உணவு பண்டங்களை சாப்பிடுவதால் மனிதருக்கு காய்ச்சல், வாந்தி, குமட்டல் போன்ற தீவிர பாதிப்பிற்கு உள்ளாகின்றன. எனவே, வீட்டை எப்போதும் எலி தொல்லை இல்லாமல் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள் இருக்கும் இடத்தில், இன்னும் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்வது மிகவும் நல்லது. அதற்கு நீங்கள் எப்போதும் வீட்டை நன்கு சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

ஒருவேளை உங்கள் வீட்டில் மூலை முடுக்கெல்லாம் எலி புகுந்து விட்டால், இந்த பொருட்களை பயன்படுத்தி அதனை எப்படி விரட்டி அடிப்பது என்பது குறித்து நாம் இந்த பதிவின் மூலம் தெரிந்து வைத்துக் கொள்வோம்.

முதலில் அதற்கு நீங்கள் ஒரு வெங்காயத்தை தோலுரித்து எடுத்துக் கொள்ளுங்கள். அதை வட்ட வட்டமாக நறுக்கி உங்கள் வீடுகளில் எலி வரும் வழிகளில் எல்லாம் இதை வைத்து விடுங்கள் இந்த வாடைக்கு எலி வரவே வராது.

அதேபோன்று, நான்கு முதல் ஐந்து கிராம்பை எடுத்து, ஒரு வெள்ளை துணியில் வைத்து முடிச்சு போட்டுக் கொள்ளுங்கள். இதையும் உங்கள் வீட்டில் எலி நடமாடும் இடங்களில் வைத்து விடுங்கள் இந்த கிராம்பு வாடைக்கும் எலி வரவே வராது.

உங்கள் வீட்டில் பாராசிட்டமில் மாத்திரை இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன், கோதுமை மாவு ஒரு ஸ்பூன் அளவு எடுத்து, இரண்டையும் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து மாவு உருண்டைகளாக பிடித்து மூலை, முடுக்குகளில் வைத்து விட்டால் எலி எட்டி கூட பார்க்காது.

தனி மிளகாய் தூள் இருந்தால் அதையும் தூவி விடலாம். அதே போல் பூண்டு எடுத்து நன்றாக நசுக்கி அதையும் ஆங்காங்கே வைத்து விடலாம். இது மட்டும் இன்றி நாப்தலின் பால், எலி வரும் இடங்களில் வைத்து விட்டால் இந்த வாடைகளுக்கு எலி வரவே வராது. ஆனால் இதை வைக்கும் போது வீட்டில் குழந்தைகள் தொடும் இடங்களாக இருந்தால் கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்.