சென்னை: தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் ஆகிய இருவருக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ளும் திட்டத்தை, பொது சுகாதாரத்துறை சமீபத்தில்செயல்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக, ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் தொடங்கப்பட்ட 15நாட்களில் 12 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொது சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘நாட்டில் அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்பைகட்டுப்படுத்த வீடு, வீடாக பரிசோதனை திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. 15 நாட்களாக பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 12 பேருக்கு புதிதாக பாதிப்பு கண்டறியப்பட்டு, அவர்களுக்கு அதற்கான சிகிச்சையும் அளிக்கப்படுகிறது.
52 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையிலேயே பாதிப்பை கண்டறிந்தால் நோயை குணப்படுத்த முடியும். நோயின் தீவிரத்தால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்கலாம்’ என்றனர்.