கோவை, ஆலாந்துறை அருகே உள்ள மத்துவராயபுரத்தில் சி.எஸ்.ஜ.கிறிஸ்துநாதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 10 -வது பிரதிஷ்டை பண்டிகைநேற்று நடந்தது .இதை தொடர்ந்து 5 ஆயிரம் பேருக்கு கறி விருந்துடன் அசனம் சாப்பாடு பரிமாறப்பட்டது. முன்னதாக ஆயர் இல்லத்தை கோவை திருமண்டல பேராயர் தீமோத்தி ரவீந்தர் பிரார்த்தனை செய்து திறந்து வைத்தார். இதில் கோவை திருமண்டல செயலர் பிரின்ஸ் கால்வின், பொருளாளர் அமிர்தம், ஆயர்கள் கிறிஸ்டோபர் ராஜேந்திரன், கருணாகரன், பிரபு சந்திரமோகன், செயலர் ஞானபிரகாசம்,பொருளர் செல்வன் ஜெயசிங், திருமண்டல குழு உறுப்பினர்கள் ஜெபசிங், ஆனந்த் ஆசீர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0