கோவை அருகே உள்ள வடவள்ளி வ. உ . சி. நகரை சேர்ந்தவர் செல்வ ரத்தினம் (வயது 43) இவர் கோவை ராஜ வீதியில் பாத்திரக்கடை நடத்தி வருகிறார். கடந்த 21ஆம் தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். மறுநாள் திரும்பி வந்து பார்த்தபோது அங்கிருந்த பித்தளை குத்து விளக்கு, செம்பு, மணி, எல்பிஜி கேஸ் ஸ்டவ் ஆகியவற்றை காணவில்லை.யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து செல்வரத்தினம் கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0