நீலகிரி மாவட்டத்தில் சாலையோரங்கள் மற்றும் வனப்பகுதிகளில் அரியவகை பழங்களும், மூலிகைகளும் காணப்படுகிறது. இது இங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து இழுத்து வருகிறது. அந்த வகையில் குன்னூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் சாலையோரங்களில் அதிகளவில் அத்திமரங்கள் உள்ளன. தற்போது இந்த மரங்கள் முழுவதும் அத்திப்பழங்கள் பழுத்து காய்த்து தொங்குகின்றன. இதனை பறித்து கடைகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். அத்திப்பழம் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது என்பதால் அதனை பலரும் வாங்கி சாப்பிட ஆர்வம் காட்டுவார்கள். இதனால் குன்னூர் பகுதிகளில் உள்ள கடைகளில் அத்திபழங்கள் விற்பனை சூடுபிடித்துள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் பழங்களை வாங்கி சென்று வருகின்றனர்.
அத்தி மரங்கள் களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும். அத்திப்பழங்கள் 6-8 மீட்டர் உயரம் வரை வளரக்கூடிய மரங்களில் காய்க்கின்றன. அத்திப்பழம் இரு வகைப்படும். சீமை அத்தி, நாட்டு அத்தி. அத்தி பழம் கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள் பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். பழுத்ததும் உட்புறம் சிவப்பாக இருக்கும். ஆண்டுக்கு இருமுறை அத்திப்பழம் அறுவடை செய்யப்படுகிறது. ஒரு மரத்தில் சுமார் 180 முதல் 300 பழங்கள் கிடைக்கும். கனிகள் கிடைக்கும் கனிகளை உலர வைத்து வெகுநாட்கள் வரை வைத்து பதப்படுத்தலாம் அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன் தலைமுடியும் நீளமாக வளர்கிறது. தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப் பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம். இதுதவிர சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றையும் நீக்குகிறது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0