2 ½ கிலோ கஞ்சாவுடன் வாலிபர் – பெண் கைது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். கார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் தீவிர கஞ்சா வேட்டை நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் நேற்று சுல்தான்பேட்டை காவல் நிலைய பகுதியில் கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சுல்தான்பேட்டை காவல் நிலைய போலீசார் செலக்கரிசல் பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது கஞ்சா விற்பனை க்காக வைத்திருந்த சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து மகன் கண்ணன் (35) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய் யப்பட்டது . இதை போல நகரகலந்தை பகுதியில் சோதனை மேற்கொண்டனர் அப்போது கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாக சுல்தான்பேட்டை பகுதியைச் சேர்ந்த தங்க வேல் மனைவி ராஜாமணி (56) என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்..