அதிமுக சார்பில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்-மாஜி அமைச்சர்கள் செ.ம.வேலுச்சாமி, கே.ஏ.செங்கோட்டையன் பங்கேற்பு.!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் திருமணமண்டபத்தில் நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட சத்தியமங்கலம், பவானிசாகர், புஞ்சை புளியம்பட்டி, ஆசனூர், தாளவாடி, கடம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான கே.ஏ. செங்கோட்டையன் மற்றும் முன்னாள் அமைச்சர்  செ.ம. வேலுச்சாமி ஆகியோர் தலைமை தாங்கினர். பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி முன்னிலை வகித்தார். 2024 ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து பூத் கமிட்டி நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில்  முன்னாள்  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ் .ஆர். செல்வம், சத்தியமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர்கள் மாரப்பன், தெற்கு ஒன்றிய செயலாளர் சிவராஜ், பவானிசாகர் ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி, புஞ்சை புளியம்பட்டி நகர செயலாளர் ஜி.கே மூர்த்தி, கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன்,
சத்தியமங்கலம்  நகர செயலாளர்  சுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் பிரபாகரன்,
தாளவாடி ஒன்றிய நிர்வாகிகள் சிக்கன்பாபு,  முன்னாள் எம்எல்ஏ
 சரஸ்வதி,  மாவட்ட மகளிர் அணி துணை செயலாளர் தமிழ்செல்வி மற்றும் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.