கோவை பள்ளிக்கூடத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவை வடவள்ளி அருகே உள்ள அஜ்ஜனூரில் பாரதிய வித்ய பவன் பப்ளிக் ஸ்கூல் உள்ளது. இந்த பள்ளிக்கூடத்துக்கு நேற்று ” இமெயில் ” மூலம் ஒரு தகவல் வந்தது அதில் பள்ளிக்கூடத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறப்பட்டிருந்தது. இது குறித்து பள்ளிக்கூட முதல்வர் ஜெயலதா வடவள்ளி போலீசில் புகார் செய்தார் இன்ஸ்பெக்டர் பிராங்கிளின், சப் இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும்வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணர்கள் விரைந்து சென்று சோதனை நடத்தினார்கள். வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. வெறும் புரளி என்பது தெரியவந்தது.இந்த ஈமெயில் அனுப்பியவர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.