திருச்சியில் 8, பள்ளிகள் 3 கல்லூரிகளில் வெடிகுண்டு இருப்பதாக புரளி.

திருச்சியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இரண்டு நாட்களாக தொடர்ந்து வெடிகுண்டு வைக்கப்பட்டு இருக்கிறது இன்னும் சற்று நேரத்தில் வெடித்து சிதறும் என்று குறுஞ் செய்தி வந்துள்ளது இதனை அடுத்து பள்ளி கல்லூரி நிர்வாகிகள் காவல் நிலையத் துக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சென்று 2 மணி நேரத்துக்கும் மேலாக சோத னையிட்டதில் வெடிகுண்டுகள் எதுவும் சிக்கவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்ததால் மாணவர்கள் வரவில்லை. இதேபோல் காலாண்டு விடுமுறை முடிந்து நேற்று திறக்கப்பட இருந்த காட்டூரில் உள்ள சிபிஎஸ்இ பள்ளிக்கும் இமெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. பெற்றோரின் செல்போனுக்கு விடுமுறை என தகவல் அனுப்பியதால் மாணவர்கள் வரவில்லை. போலீசார் சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இதுகுறித்து திருச்சி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், ‘ஸ்வேதா கிருஷ்ணன்’ என்ற பெயரில் 8 பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது தெரிய வந்தது. போலி ஐடியை உருவாக்கி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதா அல்லது வெளிநாட்டில் இருந்து மிரட்டல் மெயில் வந்ததா என்று விசாரணை நடக்கிறது. திருச்சியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் வெடிகுண்டு இருப்பதாக மர்ம நபர்கள் குறுஞ்செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது இந்தச் செய்தி பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளின் பெற்றோர்களுடைய மனதில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது