தாம்பரம் மாநகர காவல் கூடுவாஞ்சேரி போலீஸ் உதவி கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பீர்க்கன்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடிச்சூர் சிஎஸ்ஐ சர்ச் பின்புறம் உள்ள காலி மைதானத்தில் நள்ளிரவு 11.30 மணியளவில் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த விக்கி என்கிற விக்னேஷ் என்பவர் வெட்டு காயங்களுடன் கொலை செய்து கிடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பீர்க்கங்கரணை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று துருவி துருவி விசாரணை செய்ததில் மணிமங்கலம் அடுத்த வரதராஜபுரம் பகுதியில் அமர்ந்திருந்த சந்தோஷ் என்பவரை மாலை 6:00 மணிக்கு அதே பகுதியை சேர்ந்த சூரியகாந்தி என்பவர் ஏன் இங்கு அமர்ந்திருக்கிறாய் என கேட்டு செல்போனை பறித்துச் சென்றுள்ளார் பின்னர் சந்தோஷின் அம்மா சூரியகாந்தியிடம் பேசி செல்போனை வாங்கி சென்றுள்ளார் இந்நிலையில் சந்தோஷ் தனது நண்பர்களிடம் தன்னிடம் இருந்து செல்போனை பறித்துச் சென்று விட்டதாக கூறியதன் பேரில் இறந்து போன விக்கி மற்றும் நண்பர்கள் 10 பேர் சேர்ந்து இரவு 11.30 மணிக்கு சூரியகாந்தி வீட்டிற்கு கத்தியுடன் சென்று சூரியகாந்தியை வெட்டியதால் சூரியகாந்தியின் அண்ணன் ராஜீவ் காந்தி மற்றும் அவரது உறவினர்கள் சூரியகாந்தியை வெட்டிய ய நபர்களிடமிருந்து 2 கத்தி களை பிடுங்கி தன் சகோதரனை வெட்டிய நபர்களை விரட்டியதில் சந்தோஷின் நண்பர்கள் சிதறி ஓடி விட்டனர் விக்கி என்கிற விக்னேஷ் மட்டும் தனியாக மாட்டிக் கொண்டதால் அவரை விரட்டிச் சென்று பீர்க்கங்கரணை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கத்தியால் தலை மற்றும் முகம் ஆகிய பகுதிகளில் வெட்டியதால் முகம் சிதைந்த நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் இறந்துவிட்டார் பீர்க்கங்கரணை போலீசார் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் இச் சம்பவம் தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் சூர்யா என்கிற சூரியகாந்தி அமோஸ் மற்றும் குமார் ஆகியோரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர் மேலும் த லை மறைவான குற்றவாளிகளை தேடி வருகின்றனர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0