தேனி மாவட்டம் தேனியில் பழனி பாபாவின் 127 வது நினைவு தினத்தை முன்னிட்டு தனியார் திருமண மண்டபத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட கழக துணைச் செயலாளர் முகமது ருக்மான் தலைமையில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருந்து வந்த மருத்துவ பணியாளர்களிடம் அப்பகுதி சேர்ந்த இளைஞர்கள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு குருதிக்கொடை வழங்கினர்.
மேலும் இந்நிகழ்வில் தேனி பாட்டாளி மக்கள் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் சுலைமான், மாநில செயற்குழு உறுப்பினர் எம் ஜே எம் சேட் மற்றும் பழனி பாபா பாசறை மாவட்ட ஊடகப் பிரிவு செயலாளர் முகமது பசித் , கட்டடக்கலை பிரிவு செயலாளர் ஷேக் முகமது, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.