வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்த தான முகாம்..!

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் ஒய்.ஆர்.சி, என்.சி.சி, என்.எஸ்.எஸ் மற்றும் அரசு மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்ததான முகாம் கல்லூரியின் முதல்வர் சிவசுப்பிரமணியம் ஆலோசனைக்கு இணங்க கோவை அரசு மருத்துவமனை மருத்துவர் மாரியப்பன் தலைமையில் வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆடிடோரியத்தில் நேற்று நடைபெற்றது. இந்த ரத்ததான முகாமில் சுமார் 75 மாணவர்கள் மனமுவந்து கலந்து கொண்டனர் . மாணவர்களிடமிருந்து தலா ஒரு நபருக்கு சுமார் 300 மில்லி வீதம் ரத்தம் பெறப்பட்டு அதை உரிய பாதுகாப்பாக வைக்கப்பட்ட நிலையில் முகாமில் கலந்து கொண்டு ரத்ததானம் செய்த மாணவர்கள் அனைவருக்கும் பழச்சாறு வழங்கப்பட்டது. இந்த முகாம் ஏற்பாடுகளை கல்லூரியின் பேராசியர்களும் மாணவர்களும் சிறப்பாக செய்திருந்தனர்..