கள்ளக்குறிச்சியில் நடந்த கள்ள சாராய இறப்பை கண்டித்து கோவை காந்திபுரம் வி. கே. கே. மேனன் ரோட்டில் உள்ள பாஜக அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சட்ட விரோதமாக பொது மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் போராட்டம் நடத்தியதாக மாவட்ட பா.ஜ.க தலைவர் ரமேஷ் குமார், டசேலஞ்சர் துரை (முன்னாள் எம்எல்ஏ ) தெற்கு மாவட்ட தலைவர் வசந்தராஜ் துணை பொதுச்செயலாளர் கனகசபாபதி உட்பட 496 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 106 பேர் பெண்கள் ஆவார்கள்.மேலும் போராட்டத்தின் போது போலீசாரை பணி செய்ய விடாதது தடுத்ததாக ராஜன், சோமசுந்தரம், மகேந்திர ராஜ், சரவணன், முத்துசாமி, அழகு சேகர், மஞ்சு, குமரன், அருண் தேவி, மேகலா, கௌசல்யா, சுபா, ஜெயஸ்ரீ, ப்ரீத்தா , மரகதம், ஜெயப்பிரதா, மணிப்பிரியா, கோவிந்தராஜ், முருகானந்தம் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாது தடுத்தல் உட்பட 2 பிரிவின் கீழ்வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0