5 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும் பா.ஜ.கவின் வாக்குறுதி – மக்களிடம் பெரும் வரவேற்பு..!

குஜராத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து ஆறு முறையாக பா.ஜ.க ஆட்சி நடத்தி வருகிறது. தற்போது குஜராத்தில் ஏழாவது முறையாக ஆட்சி அமைக்க பிரதமர் மோடி தலைமையில் பல்வேறு தீவிரம் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட வருகின்றது.

அந்த வகையில் கடந்த காலங்களில் நடைபெற்ற தேர்தல்களை விட, இந்த தேர்தலில் அதிக எதிர்பார்ப்பு எழுந்து இருக்கிறது. குறிப்பாக பிரதமர் மோடி அதிக நாள் இங்கு முகாம் இட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை மூலம் பல்வேறு முக்கியமான அம்சங்கள் பொதுமக்களை வெகுவாக கவர்ந்து இருக்கிறது.

அந்த வகையில் பா.ஜ.க வெளியிட்டுள்ள அறிக்கையில், 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும். பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். 100 இடங்களில் ரூ.5-க்கு உணவு வழங்கப்படும். கல்லூரி மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டர், பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட வாக்குறுதிகள் அளிக்கப்பட்டுள்ளன. இத்தகைய வாக்குறுதிகள் தற்பொழுது 5 ரூபாய்க்கு உணவு வழங்கப்படும் என்று வாக்குறுதி மக்களிடையே பெரும் வரவேற்பு ஏற்பட்டு இருக்கிறது.

பாரதிய ஜனதாவின் இந்த ஒரு அறிவிப்பிற்கு அமோக ஆதரவு கிடைத்து இருக்கிறது என்று கூட கூறலாம். இந்த முறையும் குஜராத்தில் மக்களின் பெரும்பான்மையான வாக்குகளுடன் பா.ஜ.க முன்னிலை வகிக்கும் என்றும் கூறப்பட்ட வருகிறது. வருகின்ற ஒன்றாம் தேதி முதல் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் தேர்தல் களம் விறுவிறுப்பு ஏற்பட்டு இருக்கிறது.