பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணராமன் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் கல்யாணரான் மீதான குண்டர் சட்டம் ரத்து செய்யப்படுவதாக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக வலைத்தளமான ட்விட்டரில் மத மோதலை ஏற்படுத்தும் நோக்கத்தோடு கருத்து பதிவிட்டதாக கல்யாணரான் மீது குண்டாஸ் போடப்பட்டிருந்தது. இதனிடையே, சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பதிவிட்டதாகக் கைது செய்யப்பட்டுள்ள பாஜக பிரமுகர் கல்யாணராமன் மீது 2வது முறையாக குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.
கடந்த அக்டோபர் மாதம் பாஜக பிரமுகர் கல்யாணராமனை சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்திருந்தது. அப்போது கைது செய்ய வந்து போலீசாருடன் வாக்குவாதத்தில் கல்யாணராமனும் பாஜகவினரும் ஈடுபட்டனர். பின்னர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏற்கனவே ஒரு முறை கல்யாணராமன் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் கல்யாணராமன் வழக்கு தொடரந்திருந்தார். இந்த நிலையில், கல்யாணராமன் குண்டர் சட்டத்தை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.