நாகலாந்து மாநிலத்தில் நாளை மறுநாள் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி திமாப்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.
கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ”முன்பு வடகிழக்கு மாநிலங்களில் பிரிவினை இருந்தது. தற்போது அவற்றை சிறந்த நிர்வாகமாக மாற்றியுள்ளோம். வடகிழக்கு மாநிலங்களை காங்கிரஸ் கட்சி ஏடிஎம் இயந்திரங்களாக பயன்படுத்தி வந்தன. ஆனால் அவற்றை பாஜ தற்போது அஷ்டலட்சுமியின் வடிவங்களாக கருதுகின்றது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஊழலை ஒழிக்கப்பட்டுள்ளது. நாகலாந்தை இயக்குவதற்காக பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியானது அமைதி, முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகிய மூன்று மந்திரங்களை ஏற்றுக்கொண்டுள்ளது’ என்றார்.