கோவை மாவட்டம் வால்பாறையில் உதயநிதி ரசிகர் மன்றத்தின் நாயகரும் தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் டிசம்பர் 2 ல் பிறந்தநாள் காணும் உதயநிதி நற்பணி மன்றத்தின் தலைவரும் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் ஆகியோரின் பிறந்தநாளை முன்னிட்டு வால்பாறை உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்றத்தின் சார்பாக கோவை மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ் ராஜ் தலைமையில் 15 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் சதீஸ்குமார், செயலாளர் சிவா இளங்கோ மணி, பொருளாளர் காளிதாஸ், துணைத்தலைவர்கள் மகேந்திரன், முரளி, சுரேஷ்,; துணைச்செயலாளர் பாண்டி, கௌரவ தலைவர் மீசை குமார் ஆகியோர் முன்னிலையில் வால்பாறை முருகன் கோவிலில் சிறப்பு வழிபாடு செய்தனர் அதைத்தொடர்ந்து நகரப்பகுதியில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது பின்பு காலை முதல் மாலை வரை சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கி சிறப்பாகக்கொண்டாடினர் இவ்விழாவில் முன்னால் நகரச்செயலாளர் த.பால்பாண்டி,திமுக மாவட்ட துணைச் செயலாளர் ஈ.க.பொன்னுச்சாமி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் ஜே.பி.ஆர்.என்ற ஜே.பாஸ்கர், எல்.பி.எப் சங்க தலைவர் சௌந்தரபாண்டியன் , 10 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் காமாட்சி கணேசன், 14 வது வார்டு செயலாளர் சிடிசி.முருகானந்தம் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0