திருச்சி மாவட்டம் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியம் கம்பரசம்பேட்டை ஊராட்சியில் ஒன்றரை ஏக்கரில் பறவைகள் பூங்கா அமைக்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பூங்காவில் இயற்கையான சூழ்நிலையில் அரிய வகை மற்றும் வெளிநாட்டு பறவைகள் வீட்டு விலங்குகள் அனைத்தும் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பறவைகள் இனப்பெருக்கத்திற்கு என்று தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட இருக்கிறது பூங்காவில் புல்வெளிகள் சிற்பங்கள் நீருற்றுகள் வரைபடங்கள் என பல அம்சங்களில் இந்தப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் குடும்பத்துடன் சென்று வரும் வகையில் நிழலான இடங்கள் மட்டுமல்லாது திரையரங்கு, மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் பொருள்களின் விற்பனை அங்காடி மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் என அனைத்து வசதிகளுடன் ஏற்படுத்தப்பட இருக்கின்றது. இந்த இடத்திற்கு நாள் ஒன்றுக்கு 5,000 யிலிருந்து 10 ஆயிரம் பேர் வரை வந்து செல்லும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த பூங்காவில் இடம்பெறவுள்ளன. இந்த பூங்காவிற்கான கட்டுமானப்பணிகள் அனைத்தும் மிக வேகமாக நடைபெற்று வருகின்றன.
திருச்சி மாவட்டம் குடமுருட்டி பாலம் அருகே உள்ள அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போது இந்த பூங்காவில் இயற்கையான சூழ்நிலையில் அரிய வகை மற்றும் வெளிநாட்டு பறவைகள் வீட்டு விலங்குகள் வளர்க்கப்பட உள்ளது. இவ்வினங்களை வளர்த்தல் மற்றும் பாதுகாத்தலுடன் கூடுதலாக பறவைகள் இன பெருக்கத்திற்கென தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது. குறிஞ்சி, முல்லை மருதம், நெய்தல் மற்றும் பாலை ஆகிய பண்டைய கால தமிழர்களின் வாழ்வை பார்க்கும் விதமாக அமைவிடங்களும் புல்சம வெளிகள் சிற்பங்கள். நீரூற்றுகள்இடை நிறுத்தப்பட்ட பாலங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த பூங்கா கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் பொதுமக்கள் குழந்தைகள் இளைப்பாறும் வகையில் நிழல் குடைகள் மட்டுமல்லாது ஒரு திரையரங்கு மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனை அங்காடி மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன தற்பொழுது இப்பூங்காவில் பாதி சதவீத பணிகள் நடைபெற்றுள்ளன. விரைவாக பணிகள் மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் இவ்வாறு தெரிவித்தார்
திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் இந்த திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக நமக்கு நாமே திட்டத்தின் கீழ் சுமார் 13 கோடி ரூபாய் இதற்காக முதற்கட்டமாக நிதி ஒதுக்கப்பட்டது. இந்த பூங்காவில் இயற்கையான சூழ்நிலையில் அரிய வகை மற்றும் வெளிநாட்டு பறவைகள் வீட்டு விலங்குகள் அனைத்தும் வளர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக பறவைகள் இனப்பெருக்கத்திற்கு என்று தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட இருக்கிறது இதுமட்டுமல்லாமல் பூங்காவில் புல்வெளிகள் சிற்பங்கள் நீருற்றுகள் வரைபடங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்தப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் நிழலான இடங்கள் மட்டுமல்லாது திரையரங்கு மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் பொருள்களின் விற்பனை அங்காடி மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் என அனைத்து வசதிகளுடன் ஏற்படுத்தப்பட இருக்கின்றது. இந்த இடத்திற்கு நாள் ஒன்றுக்கு 5000 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பேர் வந்து செல்லும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் இந்த பூங்காவில் இடம்பெறவுள்ளன. இந்த பூங்காவிற்கான கட்டுமானப்பணிகள் அனைத்தும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரிவித்ததாவது இந்த பூங்காவில் இயற்கையான சூழ்நிலையில் அரிய வகை மற்றும் வெளிநாட்டு பறவைகள் வீட்டு விலங்குகள் வளர்க்கப்பட உள்ளது இவ்வினங்களை வளர்த்தல் மற்றும் பாதுகாத்தலுடன் கூடுதலாக பறவைகள் இன பெருக்கத்திற்கென தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட உள்ளது குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் மற்றும் பாலை ஆகிய பண்டை தமிழர்களின் ஐந்திணை வாழ்வியலை பிரதிபலிக்கும் விதமாக அமைவிடங்களும் புல்வெளிகள் சிற்பங்கள் நீரூற்றுகள் இடை நிறுத்தப்பட்ட பாலங்கள் வரைப்படங்கள் என பல அம்சங்களை உள்ளடக்கியதாக இந்த பூங்கா திட்டமிடப்பட்டுள்ளது. முதியோர் மற்றும் பொதுமக்கள் இளைப்பாறும் வகையில் நிழல் அமைவிடங்கள் மட்டுமல்லாது ஒரு திரையரங்கு மகளிர் சுய உதவிக்குழுக்களால் தயாரிக்கப்படும் பொருட்களின் விற்பனை அங்காடி மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. தற்பொழுது இப்பூங்காவில் 50 சதவீத பணிகள் நடைபெற்றுள்ளன. விரைவாக பணிகள் மேற்கொண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். திருச்சியில் பொழுதுபோக்குக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த இடம் இல்லாத காரணத்தால் இந்த பறவைகள் பூங்கா வெகு சீக்கிரத்தில் திறந்தால் பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0