ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அணையின் மேல் பகுதியில் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், கோபி எம்எல்ஏவுமான கே.ஏ. செங்கோட்டையன், பவானிசாகர் எம்எல்ஏ பண்ணாரி ஆகியோர் பூமி பூஜையில் கலந்து கொண்டு தார்சாலை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் நீர்வளத்துறை உதவி கோட்டப்பொறியாளர் பொங்கியண்ணன், உதவி பொறியாளர் சுரேஷ் பாலாஜி, முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் எஸ்.ஆர்.செல்வம், ஒன்றிய செயலாளர்கள் பவானிசாகர் தெற்கு வி.ஏ. பழனிசாமி, பவானிசாகர் வடக்கு டி.எஸ்.பழனிச்சாமி, சத்தியமங்கலம் தெற்கு சிவராஜ், சத்தியமங்கலம் வடக்கு மாரப்பன், சத்தியமங்கலம் கிழக்கு நாச்சிமுத்து, சத்தியமங்கலம் நகர செயலாளர் சுப்பிரமணியம், வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் நாராயணன், மாவட்ட கவுன்சிலர் பிரபாகரன், சிக்கரசம்பாளையம் ஊராட்சி தலைவர் சுப்பிரமணியன் மற்றும் அ.தி.மு
க. கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.