2019 டிசம்பர் மாதம் சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கொரோனா நோய்த்தொற்று 2021 வரை உலக அளவில் பெரும் பாதிப்புகளையும், இழப்புகளையும் ஏற்படுத்தியது. 2019 இல் தோன்றிய கிருமி கொஞ்சம் கொஞ்சமாக மரபியல் திரிபுகள் கொண்டு பரவத்தொடங்கியது.
ஒரு மனிதரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் போது சிறு சிறு மாற்றங்கள் அதன் உயிர் அணுக்களில் ஏற்படும். கொஞ்சம் வெளிப்படையான மாற்றம் ஏற்படும் போது அதை புதிய திரிபு வைரஸ் என்று அடையாள படுத்துவர். அப்படி கொரோனா வைரஸ், ஆல்பா, பீட்டா, காமா, ஓமிக்ரோன் என்று பல்வேறு திரிபுகளை கண்டறிந்தது.
இந்தியா , ஆப்பிரிக்கா நாடுகளில் கண்டறிய பட்ட இந்த திரிபுகளால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தனர். தடுப்பூசிகள், கட்டுப்பாடுகள் போன்றவற்றால் நோய் பாதிப்புகளை குறைத்த நிலையில் தற்போது மீண்டும் சீனாவில் BF.7 என்ற வைரஸின் புதிய மாறுபாட்டுத் தொற்று வேகமாக பரவி வருகிறது.
பொதுவாக ஒரு வைரஸ் முதலில் ஏற்படுத்தும் தாக்கத்தை விட அதன் மாறுபாட்டுத் திரிபுகள் அதிக பாதிப்புகளை உண்டாக்கும். அதன்படி இதற்கு முன் கண்டறியபட்ட ஓமிக்கிரானை விட இது வீரியம் கொண்டதாக இருக்கிறது.
இது ஓமிக்ரான் திரிபு BA.5 இன் துணை மாறுபாடு என்றாலும் இதுவரை கண்டறிந்த எந்த தடுப்பூசியும் இந்த கிருமியை தடுக்காது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். இன்று நாம் போட்டுக்கொண்ட தடுப்பூசிகள் அதிகபட்சம் BA.5 மாறுப்பாட்டு திரிபுகளைத் தான் தடுக்கும். அதனால் தடுப்பூசி போட்டிருக்கிறேன் எனக்கு மீண்டும் கொரோனா வராது என்று நினைத்துக்கொள்ள வேண்டாம்.
BF.7 மாறுபாடு இதுவரை இருந்த கிருமிகளை விட மிகவும் வேகமாக பரவக்கூடியது திறன் பெற்றுள்ளது. அதோடு மனிதர்கள் உடலில் குறுகிய காலத்திற்குள் வைரஸ் கிருமி பரவி நோயின் அறிகுறிகள் தோன்றுமாம். இதுவரை தொற்று அறிகுறி தோன்ற, 14 நாட்களை வரை ஆனது. அனால் இதில் மிக குறைவான காலமே எடுக்கிறது.கூடுதலாக, BF.7 மாறுபாடு அசல் வுஹான் வைரஸை விட 4.4 மடங்கு வலுவான நோய் பரப்பும் சக்தி கொண்டுள்ளது. ஓமிக்ரான் BF.7 மாறுபாட்டின் அறிகுறிகளில் காய்ச்சல், தொண்டை புண், மூக்கு ஒழுகுதல் மற்றும் இருமல் ஆகியவை அடங்கும்.ஊரடங்கு விதிக்க வாய்ப்புகள் குறைவு என்றாலும் கட்டுப்பாடுகளை அதிகரித்தே ஆகவேண்டிய நிர்பந்தத்தில் உலகம் மீண்டும் உள்ளது.
இந்தியாவில், BF.7 மாறுபாட்டு கிருமியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை கண்டறிந்துள்ளனர். மீண்டும் நோய்க்கிருமி வேகமாக பரவுவதால் தனி நபர் இடைவெளி, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு உத்தரவித்துள்ளது.
குஜராத் மற்றும் ஒடிசாவில் இருந்து தலா இரண்டு நோய் தொற்றுகள் பதிவாகியுள்ளன. இதற்கிடையில், ஜெர்மனி, பெல்ஜியம், பிரான்ஸ், டென்மார்க், அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளும் இந்த நோய் தொற்றுக்களை உறுதி செய்துள்ளன.
சமீபத்திய தரவுகளின்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 129 புதிய தொற்றுகள் பதிவாகியுள்ளன. நாட்டில் உள்ள நோய் தொற்றின் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் ஒரு இறப்புடன் 3,408 ஆக உள்ளது. மீண்டும் வேகமாக பரவும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. .