படுக்கையில் பீடி விழுந்து முதியவர் உடல் கருகி சாவு.

கோவை சூலூர் பக்கம் உள்ள காங்கேயம் பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது  83 ) இவர் புகை பிடிக்கும் பழக்கம் உடையவர். சம்பவத்தன்று வீட்டில் படுத்து கொண்டே பீடி குடித்தார். பின்னர் அப்படியே தூங்கிவிட்டார் இதனா பீடி தீ படுக்கையில் விழுந்து தீப்பிடித்தது இதில் அவரது உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக சூலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்துவிட்டார் .இது குறித்து அவரது மகன் குமார் சூலூர் போலீசில் புகார் செய்துள்ளார் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.