கோவை அருகே உள்ள மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 35 )தனியார் நிறுவன ஊழியர். இவர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் கோவை நோக்கி வந்தார். இதற்காக அவர் உக்கடம் மேம்பாலத்தில் ஏறினார். சிறிதுதூரம் மேம்பாலத்தில் வந்த போது திடீரென்று அவருடைய கழுத்தில் நூல் ஒன்று மாட்டியது. அத்துடன் அந்த நூல் அவருடைய கழுத்தை லேசாக அறுத்தது. இதனால் நிலை தடுமாறி அவர் சுதாரித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளை மேம்பாலத்தில் ஓரத்தில் நிறுத்தினார். பின்னர் அவர் தனது கழுத்தில் மாட்டிய நூலை எடுக்க முயற்சித்த போது அந்த நூல் அவரது கை விரல் களை கிழித்து ரத்தம் கொட்டியது. அப்போதுதான் அவருக்கு அந்த நூல் பட்டத்தில் உள்ள மாஞ்சா நூல் என்பதும் அந்த நூலை பயன்படுத்தி யாரோ பட்டம் விட்டது தெரிய வந்தது. உடனே அவர் கோவை மாநகர போலீஸ் கட்டுப்பாட்டுஅறைக்கு தகவல் தெரிவித்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு மேற் கொண்டனர். படுகாயம் அடைந்த வாலிபர் கார்த்திக் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார் .பின்னர் அவர் அங்கிருந்த போலீஸ் உயர் அதிகாரிகளை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்தார். அந்த மனுவில் உக்கடம் மேம்பாலம் பகுதியில் யாரோ மாஞ்சா நூலை பயன்படுத்தி பட்டம் பறக்கவிட்டுள்ளனர். இதனால் அந்த வழியாக சென்றபோது தனக்கு அந்த நூல் அறுத்து கை – கழுத்தில் காயம் ஏற்பட்டது. இது தொடர் பாக பெறும் அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாஞ்சா நூல்பயன்படுத்தி பட்டம் விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தன்னைக் காயப்படுத்தியவர்கள் யார்? என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0