கோவை ஜூலை 5 தமிழக வியாபாரிகள் சம்மேளன வடவள்ளி கிளையின் சார்பில் வடவள்ளி காவல் நிலையத்தில ஒரு புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது, அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- வடவள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளான சோமயம்பாளையம், கல்வீரம்பாளையம், கணுவாய், போன்ற பல்வேறு பகுதிகளில் சிறு குறு வியாபாரிகள் தங்களது தொழிலை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், இந்தப் பகுதியில் இரவு நேரங்களில் உலா வருகின்ற மர்ம நபர்கள், கடையை நோட்டமிட்டு, கடையின் பூட்டுகளை, உடைத்து உள்ளே சென்று அங்கு இருக்கும் பொருட்களையும் விலை உயர்ந்த செல்போன்களையும், பணத்தையும், கொள்ளையடித்து செல்கின்றனர். இந்த நிலையில், கடந்த 3ம்தேதி, அதிகாலை 3 மணியளவில் கணுவாய் பகுதியில், உள்ள ஒரு பேன்சி ஸ்போர் கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த செல்போனை திருடி சென்றுள்ளனர். இது அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.இந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு தமிழக வியாபாரிகள் சம்மேளன வடவள்ளி கிளை நிர்வாகிகள் , உறுப்பினர்கள், வியாபாரிகள் நேற்று வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளனர்.சம்பந்தப்பட்ட சிசிடிவி காட்சிகளையும் காவல்துறையினரிடம் வழங்கியுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினரும் இரவு நேரங்களில் ரோந்து பணியில், அதிகமாக காவலர்களை ஈடுபடுத்தி சிறுகுறு வியாபாரிகளின் கடையை பாதுகாக்க தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்படும் என்றும் கூறினர்.திருட்டை தடுக்க காவல் துறையினருக்கு தமிழக வியாபாரிகள் சம்மேளனம் முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்று அதன் தலைமை கமிட்டி தலைவர் எஸ் எம் என்ற பி. முருகன்,பொருளாளர் வெனிஸ் ஆகியோர் கூறியுள்ளனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0