பெங்களூரு-சொத்து சேர்த்த வழக்கில், துணை முதல்வர் சிவகுமாரிடம் விசாரிக்க, சி.பி.ஐ.,க்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை, கர்நாடகா உயர்நீதிமன்றம் நீட்டித்து உள்ளது. கர்நாடகா துணை முதல்வர் சிவகுமார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது. தன் மீது சி.பி.ஐ., பதிந்த வழக்கை ரத்து செய்ய கோரி, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில், அவர் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை நீதிபதி நடராஜன் தலைமையிலான அமர்வு, கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு முன்பு விசாரித்தது. அப்போது சிவகுமாரிடம் விசாரணை நடத்த, சி.பி.ஐ.,க்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் சிவகுமார் தாக்கல் செய்த மனு, நீதிபதி நாகபிரசன்னா தலைமையிலான, அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
நீதிபதி கூறுகையில், ‘இந்த மனுவை நீதிபதி நடராஜன் தலைமையிலான அமர்வு விசாரித்தது. தற்போது எனது அமர்வுக்கு, விசாரணைக்கு வந்து உள்ளது. இந்த மனுவை எந்த அமர்வு விசாரிப்பது என்று, தலைமை நீதிபதி பிரசன்னா வரலே முடிவு செய்வார். மறுவிசாரணை நடக்கும் வரை, மனுதாரரிடம் விசாரணை நடத்த, சி.பி.ஐ.,க்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுகிறது,’ என்றார்.