ஆவடி போலீஸ் கமிஷனர் கி. ஷங்கரை குறை கேட்பு முகாமில் சந்தித்த இப்ராஹிம் வயது 76 தகப்பனார் பெயர் காலி து விளம்பூர் கிராமம் செங்கல்பட்டு பகுதியில் வசிப்பதாகவும் கடந்த 1981ம் வருடம் அம்பத்தூர் தாலுக்கா கொரட்டூர் ஸ்ரீ பாலாஜி நகரில் 2420 சதுர அடி வீட்டுமனையை ராகவ நாயக்கர் முனுசாமி நாயக்கர் ஆகியயோ ரிடமிருந்து கிரயம் பெற்று அனுப வத்தில் வைத்திருந்ததாகவும் இந்நிலையில் அப்துல் ரஹ்மான் என்பவர் இப்ராஹிம் தனது தந்தை எனக் குறிப்பிட்டு அவர் இறந்து விட்டதாக போலியான இறப்பு சான்று மற்றும் வாரிசு சான்று பெற்று கடந்த 2022 ம் ஆண்டு தனது மனைவி ஹசீனா என்பவருக்கு போலியான தான செட்டில்மெண்ட் எழுதி அதை சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்தும் அதை வைத்து பிரகாஷ் என்பவருக்கு பொது அதிகாரம் கொடுத்து அதன் மூலம் செஞ்சம்மாள் என்பவருக்கு கிரைய விற்பனை செய்து சொத்தை இப்ராஹிம் சொத்தை கொள்ளையடித்து உள்ளார்கள் கொள்ளையர்கள் தங்களுக்கு சொந்தமில்லாத இடத்திற்கு போலி ஆவணங்களை தயார் செய்து அதை உண்மையான ஆவணங்கள் போல பயன்படுத்தி ரூபாய் 90 லட்சம் மதிப்புள்ள மனையை நம்மை யார் கேள்வி கேட்க முடியும் என கொள்ளையடித்துள்ளனர். இப் புகார் மனு தொடர்பாக ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் அவர்களின் உத்தரவின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் துணை ஆணையாளர் பெருமாளின் மேற்பார்வையில் நிலப் பிரச்சனை தீர்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் பிராடுகள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டார் காலை 8.30 மணிக்கு கொள்ளையன் பிரகாஷ் தகப்பனார் பெயர் ரகு கள்ளிகுப்பம் அம்பத்தூர் சென்னை என்பவனை கோழியை அமுக்குவது போல் அமுக்கி கைது செய்தனர் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைத்தனர் இந்த வழக்கில் துரித விசாரணை மேற்கொண்டு முக்கிய குற்றவாளியை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு நிலப் பிரச்சனை தீர்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கரையும் மற்றும் அவரது குழுவினரை ஆவடி போலீஸ் கமிஷனர் அதிரடி நாயகன் சங்கர் பாராட்டு தெரிவித்தார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0