தரமற்ற முறையில் அமைக்கப்பட்ட சாலை.! ஓராண்டுக்குள் சேதம் அடைந்ததால் அவதி..!

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே பெரிய கீரமங்கலத்தில் புதிதாக தீயணைப்பு நிலைய கட்டடம் கட்டப்பட்டது. சேந்தனி செல்லும் சாலையில் இருந்து அரை கி.மீ., துாரத்தில் உள்ள இந்த தீயணைப்பு நிலையத்திற்கு மெட்டல் சாலை அமைக்கப்பட்டது. மழை காலத்தில் சேறும், சகதியுமாக மாறியதால் வாகனம் செல்ல முடியாத நிலை இருந்தது. இதனால், வாகனத்தை அருகில் உள்ள நுகர்பொருள் வாணிப கிட்டங்கி வளாகத்தில் நிறுத்தப்பட்டு வந்தது.மேலும்,தீ விபத்து போன்ற அவசர காலங்களில் வாகனத்தில் நீர் நிரப்பி சம்பவ இடத்திற்கு செல்ல முடியாமல் வீரர்கள் சிரமப்பட்டனர். இதனையடுத்து,மெட்டல் சாலையை தார் சாலையாக  கடந்த ஓராண்டுக்கு முன்பு மாற்றப்பட்டது ஆனால் அதற்குள்ளாக சாலை முழுவதும் சேதம் அடைந்துள்ளதால் தீயணைப்பு வாகனத்தை அவசர காலத்தில் எடுக்க முடியாமல் மீண்டும் சிரமம் ஏற்பட்டுள்ளது. தரமற்ற முறையில் சாலை அமைக்கப்பட்டதால் தான் அதற்குள்ளாகவே சேதம் அடைந்து விட்டது. இதனால், அவசர காலத்திற்கு தீயணைப்பு வாகனத்தை எங்கும் எடுத்துச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு ள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும் மாவட்ட நிர்வாகமும் சேதமடைந்த தார் சாலையை விரைந்து செப்பனிட்டு தரமானதரமான தார்ச் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.