குப்பைத் தொட்டியில் கிடந்த ஆண் சிசு மீட்பு..

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டி பிரிவில் ஒரு தனியார் மருத்துவமனை உள்ளது .இந்த மருத்துவமனையின் பின்புறத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் நேற்று மாலை குழந்தை அழும் சத்தம் கேட்டது. உடனே அந்த பகுதியை சேர்ந்தவர்கள் அங்கு சென்று பார்த்த போது பிறந்து 2 மணி நேரம் ஆன ஆண் சிசு அழுதபடி கிடந்தது. உடனே இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசுக்கு தகவல் கொடுக்ப்பட்டது. போலீசார் விரைந்து சென்று அந்த ஆண் சிசுவை உயிருடன் மீட்டு பெரியநாயக்கன்பாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த ஆண் சிசுவை வீசி சென்றவர் யா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.