திருச்சியில் விவசாயிகளை தாக்கிய காவலர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும் மாநகர காவல் ஆணையரிடம் அய்யாக்கண்ணு மனு.

திருச்சியில் இருந்து விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் சென்னை சென்று அத்துறை சார்ந்த உயர் அதிகாரியிடம் மனு அளிக்க திருச்சி ரயில் நிலையம் நோக்கி சென்ற விவசாயிகளை மறித்து கைது செய்து அடைத்து வைத்தனர் அவர்களை விடுவிக்க கோரி செல்போன் டவர் ஏறி போராட்டம் நடத்திய ஐந்து விவசாயிகளை மாநகர காவல் துறையினர் டவரில் மேலே ஏறி விவசாயிகளை கனிவுடன் கீழே இறக்காமல் மேலே அடித்து கீழே இழுத்து வந்து மிதித்து தகாத வார்த்தைகளால் திட்டியும் லத்தியால் கடுமையான தாக்குதல் நடத்தினார்கள் அவ்வாறு தாக்குதல் கொடுங்காயம் ஏற்பட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றன இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று மனு அளித்துள்ளனர் அதனைத் தொடர்ந்து விவசாயிகளின் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையினரை பணி நீக்கம் செய்யக்கோரி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கத் தலைவர் அய்யா கண்ணு அவர்கள் தலைமையில் திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் காமினி அவர்களிடம் மனு அளித்தனர்.