அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தியில் இருந்து புனித மண் எடுத்து வரப்பட்டு தென் சீரடி கோவிலில் சிறப்பு வழிபாடு.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அருகே அண்ணாநகர் பகுதியில் தென் சீரடி சக்தி சாய்ராம் தர்மஸ்தலா கோவில் உள்ளது. அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தியில் இருந்து புனித மண் எடுத்து வரப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சுவாமிக்கு திருமஞ்சனம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து காலை 10 மணிமுதல் ராமர் சீதை உற்சவர் சிலைகள் வைக்கப்பட்டு தீபங்கள் ஏற்றப்பட்டன. இதையடுத்து ஸ்ரீ ராம பக்த சபா சார்பாக பஜனை பாடப்பட்டது.இதனை தொடர்ந்து அகண்ட நாம பாராயணம் நடைபெற்றது. மேலும் உட்பிரகார மண்டபத்தில் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் எல்ஈடி திரை மூலம் நேரடி ஒளிபரப்பு செய்யப்பப்பட்டு ஆன்மீக பக்தர்கள் பார்த்து வழிபட்டனர்.இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாட்டில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டது.