கோபி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியின் செஞ்சுருள் சங்கம் சார்பாக கல்லூரி மாணவர்கள் மது மற்றும் போதைப் பொருளுக்கு அடிமையாவதை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு 27.02.2024 (செவ்வாய் கிழமை) அன்று கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நாமக்கல், SEED NGO பவுண்டேசனின் மனநல சமூக சேவகர் திரு.பி.திலகன் அவர்கள் கலந்து கொண்டார். அவரது உரையில் பல்வேறு விதமான போதைப்பொருள் பற்றியும் அவற்றை பயன்படுத்துவதால் ஒருவருக்கு ஏற்படக்கூடிய உடல் மற்றும் மனம் சார்ந்த பாதிப்புகளை பற்றியும் விரிவாக ஆதாரங்களுடன் மாணவர்களுக்கு விளங்கும் வண்ணம் எடுத்துரைத்தார். அடுத்தாத விழாவின் மற்றுமொரு சிறப்பு விருந்தினரான சென்னை, பால மந்திர் காமராஜ் அறக்கட்டளையை சார்ந்த சமூக சேவகர் திரு.ஜெகன் ராஜ் அவர்கள் போதை மறுவாழ்வு மையம் குறித்தும் அவற்றை அணுகும் விதம் குறித்தும் விளக்கமாக எடுத்துரைத்தார். முன்னதாக பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. தங்கவேல் அவர்கள் இந்நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். மேலும் இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் சுமார் 250க்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் கலந்து கொண்டார்கள். நிகழ்வில் முன்னதாக மேலாண்மை துறையின் துறைத்தலைவி டாக்டர்.எஸ்.சத்தியசுந்தரி வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை கல்லூரியின் செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் பா.விக்னேஷ்வரன் செய்திருந்தார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0