கோவை சத்தி சாலையில் உள்ள புரோஜோன் மாலில் ஆட்டோ ஷோ எனும் பெயரில் புதிய மாடல் கார்கள் மற்றும் பைக்குகள் கண்காட்சி மற்றும் விற்பளை இன்று தொடங்கியது. இன்று 18 ம் தேதி தொடங்கி 19 , 20 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த கண்காட்சி மற்றும் விற்பனை மேளாவை,
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் ரிப்பன் வெட்டியும், குத்துவிளக்கேற்றியும் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக ரமணி குரூப் இயக்குனர் சசி குமார், கோவை ஹீண்டாய் துணை தலைவர் அபுதாகீர், இந்து தமிழ் திசை தலைமை அதிகாரி சங்கர் சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆட்டோ ஷோவை ஏட் வேவ்ஸ் அட்வை டைசிங்க் (Adwavess Advertising) நடத்துகிறது.
மேலும், FM Partner-ராக HelloFM-மும், Mall Partner-ராக Prozone மாலும்,
Press Partner-ராக The Hindu Tamil-ழும் மற்றும் Online Partner-ராக செய்தியாளன் சமூக வளைதளமும் செயல்படுகிறது. ஆட்டோ ஷோவில் புதிய மாடல் கார்கள் மற்றும்
பைக்குகளின் அணிவகுப்புடன் 50 ஸ்டால்கள் பங்குபெற உள்ளன.
எளிய முறை நிதியுதவிக்கு பைனான்ஸ் எக்ஸ்போ, பழைய வாகனத்தை மாா்க்கெட் விலையை விட அதிக விலைக்கு விற்க மெகா எக்ஸ்சேஞ்ச் மேளா, மாபெரும் உணவு திருவிழா, மற்றும் பல பொழுதுபோக்கு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன..
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0