மீட்டர் கட்டணத்தை உயர்த்த கோரி ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்.

கோவை;  மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி கோவை மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் அனைத்து ஆட்டோ டிரைவர்கள் சங்கங் கள் சார்பில் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்ட த்திற்கு தமிழ்நாடு அனைத்து வகை அமைப்பு சாரா தொழிலாளர் நல நற்பணி சங்க நிறுவனத் தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆட்டோ டிரைவர்கள் கூறியதாவது:- ஆட்டோ களுக்கு மீட்டர் கட்டணத்தை உயர்த்தி 11 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது .சுப்ரீம் கோர்ட்டு வலியுறுத்தியவாறு மீட்டர் கட்டணத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும். சொந்த வாகனத்தை வாடகைக்கு பயன் படுத்தும் பைக் டாக்சி பயன்பாட்டால் ஆட்டோ டிரைவர்களின் வாழ்வாதாரம் பாதிக் கப்படுகிறது.. இதை அரசு முறைப்படுத்த வேண்டும் .தனியார் நிறுவனங்கள் மூலம் எலக்ட்ரிக் ஆட்டோக்களை அறிமுகப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆன்லைனில் புக் செய்து இயக்கப்படும் ஆட்டோ க்களின் நடைமுறையில் சொந்த வாகனங்களை இயக்குவதை அனுமதிக்க கூடாது. ஆன்லைன் ஆட்டோ சேவையை அரசே ஏற்று நடத்த வேண்டும் .புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது. ஆட்டோ டிரைவர்களுக்கு மானிய கடன் வழங்க அலைக்கழிக்க கூடாது. நலவாரிய அட்டை வழங்குவதை பொதுமயமாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.