பைக் டாக்சியை தடை செய்ய கோரி ஆட்டோ டிரைவர்கள் 2 வது நாளாக போராட்டம்.

கோவை; பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும். ஆட்டோக்களுக்கு மீட்டர் கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் உள்ள ஆட்டோ டிரைவர்கள் தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் டாடாபாத்தில் ஆட்டோ டிரைவர்கள் தங்கள் முகத்தில் கருப்பு நிற முககவசம் அணிந்து போராட்டம் நடத்தினார்கள். நேற்று 2 – வது நாளாக உக்கடம் பஸ் நிலையம் அருகே கோவை மாவட்ட ஆட்டோதொழிலாளர் அனைத்து சங்க கூட்டு கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ,இந்தப் போராட்டத்துக்கு அனைத்து சங்க கூட்டு கமிட்டி தலைவர் செல்வம் தலைமை தாங்கினார் கோவை மாநகர் மாவட்ட அண்ணா தொழிற் சங்க செயலாளர் அசோக்குமார் தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர் சம்மேளன பொதுச் செயலாளர் சிவாஜி, சி.ஐ.டி.யு. முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.ஆட்டோ டிரைவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினார்கள்.