கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையம் முன்பு ஆட்டோ டிரைவர் தீக்குளிப்பு. மகன் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்ததால் ஆத்திரம்.

கோவை கவுண்டம்பாளையம் மெய்காந்தர் வீதியை சேர்ந்தவர் சேகர் (45). ஆட்டோ டிரைவர். அவரது மகன் மணிபாரதி (19). இந்த நிலையில் நேற்று கவுண்டம்பாளையம் போலீசார் அன்னை இந்திரா காந்தி நகர் அருகே உள்ள காலி மைதானம் பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர் அப்போது அங்குசந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த மணிபாரதி மற்றும் ஜானகிராமன் (27) ஆகியோரை பிடித்து சோதனை செய்தனர். அதில் அவர்களிடம் கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் இருவரையும் கைது செய்து, சிறையில் அடைந்தனர். இதுகுறித்து கேட்க இன்று காலை சேகர் கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு போலீசாரிடம் மகன் மீது கஞ்சா வழக்கு பதிவு செய்தது குறித்து விசாரித்தார். அப்போது திடீரென அவர் வைத்திருந்த மண்எண்ணையை எடுத்து உடலில் ஊற்றி போலீஸ் நிலையம் முன்பு தீவைத்து கொண்டார். இதில் உடல் முழுவதும் கருகியது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் தீயை அணைத்து சேகரை மீட்டனர். தொடர்ந்து ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. காவல் நிலையமும் தீக்குளிப்பு முயற்சி பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.