கடன் தொல்லையால் தூக்கு போட்டு ஆட்டோ டிரைவர் தற்கொலை

கோவை செட்டி வீதியைச் சேர்ந்தவர் பாலாஜி (வயது 56) ஆட்டோ டிரைவர். இவர் நிறைய பேரிடம் கடன் வாங்கி இருந்தார். அதை அவரால் திருப்பிக் கொடுக்க முடியவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த பாலாஜி நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மின்விசிறியில் மனைவியின் சேலையையை கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி சித்ரா கடைவீதி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.