தமிழகத்தில் ஆகஸ்ட் 9-ம் தேதி மொகரம் பண்டிகை கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு தலைமை ஹாஜி நேற்று இரவு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
நேற்று மாலை மொகரம் மாதத்தின் முதல் பிறை தமிழகத்தில் எங்கும் தென்படவில்லை.
ஆகையால், ஞாயிற்றுக்கிழமை (31-ம் தேதி) அன்று மொகரம் மாத முதல் பிறை எனக் கணக்கிட்டு இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார். மொகரம் பண்டிகையான ஆகஸ்ட் 9-ம் தேதி (செவ்வாய்) அரசு பொது விடுமுறை அளிக்கப்படவுள்ளது.