பாஸ்ட் புட் வியாபாரியை கத்தியால் குத்தி கொல்ல முயற்சி. 2பேர் கைது

கோவை; கோவை குனியமுத்தூர் ,கங்கா நகர், 4வது வீதியைச் சேர்ந்தவர் பெரியசாமி ( வயது 29) தள்ளுவண்டியில் பாஸ்புட் வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று குனியமுத்தூர் ரைஸ் மில் ரோட்டில் உள்ள அம்மா உணவகம் அருகே நடந்து சென்றார் . அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பேர் இவரை வழிமறித்து தகராறு செய்தனர். பின்னர் அவரை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர் இதில் பெரியசாமி படுகாயம் அடைந்து கோவை அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்பு பெரியசாமி நண்பர் முத்துராஜா என்பவரது பிறந்தநாள் விழா கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது இது குறித்து குனியமுத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் வழக்கு பதிவு செய்து குனியமுத்தூர் வேடப்பன் வீதியைச் சேர்ந்த ராஜிவ் ( வயது 29) தர்மராஜா கோவில் வீதியை சேர்ந்த சந்திரன் என்ற சந்துரு ( வயது 26) ஆகியோரை நேற்று கைது செய்தார். இவர்கள் மீது கொலை முயற்சி உட்பட 4 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.