கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள அருள்மிகு ஶ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் 20 ஆம் ஆண்டு தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று மாபெரும் அன்னதானம் நடைபெற்றது இந்த அன்னதானத்தை கோவை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜெகநாதன் தொடங்கி வைத்தார். வால்பாறை நீதிமன்ற நீதிபதி மீனாட்சி மற்றும் சிறப்பு அழைப்பாளர்களுக்கு முன்னதாக தைப்பூச விழா பொறுப்பாளர்கள் சார்பாக தைப்பூச விழா செயலாளர் மயில் கணேசன் சால்வை அணிவித்து வரவேற்ற நிலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தீர்த்தக் குடங்கள் எடுத்து ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர் அதனைத் தொடர்ந்து லட்சுமணன் மற்றும் வால்பாறை முருக பக்தர்கள் அங்க அலகு குத்தி பறவை காவடி எடுத்து வந்தனர். இந்நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் அரோகரா கோஷங்கள் எழுப்பியவாறு வால்பாறை நல்காத்து ஆற்றிலிருந்து நகர் வழியாக பக்திப்பரவசத்தோடு ஊர்வலமாக சென்று தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர் வெகு சிறப்பாக நடைபெற்ற. இவ்விழா ஏற்பாடுகளை தைப்பூச விழா பொறுப்பாளர்கள் செய்திருந்த நிலையில் பக்தர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்த நிலையில் மாலையில் ஸ்ரீ சுப்ரமணியசுவாமி வள்ளி நாயகி, தெய்வானை தேவியருடன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த தைப்பூச திருவிழாவை முன்னிட்டு வால்பாறை திமுக நகரக்கழகத்தின் சார்பாக நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அனைவருக்கும் வழங்கி சிறப்பித்தார்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0