கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இது பக்தர்களின் 7- வது படை வீடாக கருதப்படுகிறது. இந்த கோவிலில் வருகிற ஏப்ரல் மாதம் 4-ந் தேதி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. இதற்காக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார். மேலும் கோவிலில் “லிப்ட் ” அமைக்கும் பணிகள், புதிதாக திருமண மண்டபம் கட்டும் இடத்தைபார்வையிட்டார் அப்போது அவர் கூறியதாவது:-மருதமலை கோவில் அடிவாரத்தில் 160 அடி உயரத்தில் கல்லால் ஆன முருகன் சிலையை அமைக்க உள்ளோம். இது ஆசியாவிலேயே அதிக உயரம் கொண்டது. இதற்கான ஆய்வு பணி தற்போது நடந்துள்ளது. முதலமைச்சரின் அனுமதியோடு தமிழ் கடவுள் முருகனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் இது அமையும். மேலும் இந்த கோவிலில் வருகிற ஏப்ரல் மாதம் குடமுழுக்கு நடைபெற உள்ளது.பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் வருகிற 31ஆம் தேதி ஆக்கிரமிப்புகள் அனைத்தையும் அகற்றுவதற்கு போலீசாரிடம் பாதுகாப்பு கேட்டு இருக்கிறோம் ஆக்கிரமிப்புக்களை அகற்றுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் பேரூர் கோவிலில் அன்னை தமிழில் மந்திரங்கள் ஓதி குடமுழுக்கு நடத்தப் படும். வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு விரைவில் அறங்காவலர்கள் நியமிக்க உள்ளோம். வெள்ளியங்கிரி மலையில் ரூ.21 கோடி செலவில் வெவ்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறோம். ரூ. 1,200 கோடி அளவில் உபயதாரர்கள் நிதிதிருக்கோவிக் களுக்கு வந்துள்ளது..இதே போல ஊட்டியில் அமைந்திருக்கக்கூடியகாந்தல் சுப்பிர மணிய சுவாமி திருக்கோவிலில் ரூ. 16 கோடி செலவில் பெரும் திட்டப்பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளது. ரூ 872 கோடி செலவில் கோவில்களில் பெரும் திட்ட வரைவு பணிகள் நடைபெற உள்ளது..இவ்வாறு அவர் கூறினார். அமைச்சருடன் முதன்மைச் செயலாளர். சந்திரமோகன் கலெக்டர் கிராந்தி குமார் .மருதமலை கோவில் அறங் காவலர் குழு தலைவர் உறுப்பினர்கள் சென்றனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0