ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில், தேசிய அளவிலான கருத்தரங்கம்…

கோபி, ஸ்ரீ வெங்கடேஸ்வரா ஹை-டெக் பொறியியல் கல்லூரியில், சி எஸ் ஐ ஆர் – யின் நிதியுதவியுடன் விண்வெளி துறையில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட பொருட்கள் மற்றும் அதன் பயன்பாடுகள் குறித்து தேசிய அளவிலான கருத்தரங்கம் மெக்கானிக்கல் துறை மூலம் 30.01.2024 (செவ்வாய்கிழமை) அன்று கல்லூரி கலை அரங்கில் நடைபெற்றது. இக்கருத்தரங்கின் சிறப்பு விருந்தினராக முனைவர். பி. கருணாகரன், பேராசிரியர் வானூர்தி பொறியியல் துறை, எக்ஸ்ல் பொறியியல் கல்லூரி, குமாரபாளையம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவரது உரையில், கூட்டு கலவையில் உருவான பொருள்களில் இருந்து தயாரிக்கப்பட்ட பொருட்களை கொண்டு விண்வெளி துறையில் எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்று மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும் இதற்கான ஆராய்ச்சிகள் மென்மேலும் வளர்ந்து மிக இலகுரக பொருட்களை கொண்டு விண்வெளி நிலையங்களை எவ்வாறு அமைக்கின்றனர் என்று எடுத்துரைத்தார்.

கருத்தரங்கின் பிற்பகல் உரையில் சிறப்பு நிபுணர் முனைவர் எ.வி. பாலன், பேராசிரியர் மற்றும் இயந்திரவியல் துறை தலைவர், கே எஸ் ஆர் பொறியியல் கல்லூரி, திருசெங்கோடு அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவரது உரையில், விண்வெளி துறையில் பயன்படுத்தப்படும் PICA போன்ற வெப்பப் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் விண்கலக் கூறுகளுக்கான மேம்பட்ட உலோகக் கலவைகள் ஆகியவை குறித்து மாணவர்களிடையே உரையாடினார். இக்கருத்தரங்கில் சுமார் 12 க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து 75 கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். இக்கருத்தரங்கின் இறுதியாக கருத்தரங்கில் பங்குபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இக்கருத்தரங்கில் கல்லூரியின் முதல்வர் முனைவர் ப. தங்கவேல் அவர்கள் கலந்துகொண்டு விழாவிற்கு தலைமை தாங்கி விண்வெளி துறையில் மேம்பட்ட பொருட்களின் பயன்பாடுகளின் முக்கியத்துவம் குறித்து உரையாடினார். இக்கருத்தரங்கில் கல்லூரியின் துணைமுதல்வர், தலைமையாளர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறை, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் . இயந்திரவியல் துறையின் உதவிப்பேராசிரியர்கள் திரு. க. கண்ணகுமார், திரு. செ. மெய்நாதன் மற்றும் திரு. ப. லிங்கேஸ்வரன் அவர்கள் இக்கருத்தரங்கிற்கான ஏற்பாடுகளை செய்ததோடு நன்றியுரை வழங்கினார்.