கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், , திட்ட இயக்குனர் பெ. சந்திரா அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் இளவரசி மற்றும் கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் தனசேகரன் தலைமையில் உதவி திட்ட அலுவலர் . அறிவழகன், முன்னிலையில் வாக்களிக்க தகுதியுடைய அனைவரும் தங்கள் ஓட்டினை பதிவு செய்திட வலியுறுத்தி பேரணி நடைபெற்றது. முன்னதாக பேரணியில் கலந்து கொண்ட அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் பின்னர் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார் பேரணியில் கோயமுத்தூர் மக்களவைத் தொகுதி வாக்காளப் பெருமக்கள் அனைவரும் தங்களுடைய வாக்குகளை முழுமையாக செலுத்த விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பப்பட்டு பேரணி நடைபெற்றது. பேரணியில் வட்டார இயக்க மேலாளர். அபிநயா, வட்டார ஒருங்கிணைப்பாளர் வீரகந்தா, சாரதா, சென்பகம், சர்மிளா மற்றும் சமுதாய சுய உதவி குழு பயிற்றுநர் , சுய உதவி குழு உறுப்பினர்கள். சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0