பணம் கேட்டு தாயை தாக்கி கொலை மிரட்டல். மகன் கைது.

கோவை அருகே உள்ள வெள்ளானப்பட்டி, கருப்பராயன் கோவில் வீதியை சேர்ந்தவர் பிரபாகரன் இவரது மனைவி ரேணுகாதேவி ( வயது 53)இவர்களது மகன் பிரதீப் (வயது 24 )இவர் திருமணம் முடிந்து இருகூர் என்.ஜிஆர். புரத்தில் வசித்து வருகிறார்.பிரபாகரன் அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். நீலிக்கோணாம்பாளையத்தில் இவரது கணவருக்கு சொந்தமான வீட்டை ரூ 40 லட்சத்துக்கு விற்பனை செய்தனர். அந்த பணத்தைஅவரது மகன்களுக்கு பிரித்துக் கொடுத்தது போக மீதி பணத்தை ரேணுகாதேவி தனது கணவர் பிரபாகரின் மருத்துவ செலவுக்காக வைத்திருந்தார். இந்த பணத்தைக் கேட்டு மகன் பிரதீப் தாயாரிடம் தகராறு செய் தாராம். பின்னர் அவரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து ரேணுகாதேவி சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ் பெக்டர் ஞானசேகரன் வழக்கு பதிவு செய்து மகன் பிரதீப்பை கைது செய்தார். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 4பிரிவுகளில் வழக்கு பதிவு,செய்யப்பட்டுள்ளது.