புதுப்பெண்ணை தாக்கி கொலை மிரட்டல். கணவர் கைது.

கோவை மாவட்டம் சூலூர் பக்கம் உள்ள போகம்பட்டியை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 29) இவருக்கும் இருகூர், பழனியப்ப தேவர் வீதியைச் சேர்ந்த விஷ்ணு பிரியா ( வயது 19) என்பவருக்கும் கடந்த 9 – 9 – 2024 அன்று திருமணம் நடந்தது.கதிரேசன் குடிப்பழக்கம் உடையவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியுடன் தகராறு செய்தார். இது குறித்து விஷ்ணு பிரியா தனது பெற்றோரிடம் செல்போனில் தெரிவித்தார். ஆத்திரமடைந்த கதிரேசன் செல்போனை வாங்கி உடைத்தார்.மேலும் அவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் விஷ்ணு பிரியா காயமடைந்தார். இவர் சிகிச்சைக் காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் இது குறித்து சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்யப்பட்டது.சப் இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்கு பதிவு செய்து கதிரேசனை நேற்று கைது செய்தார். இவர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை மிரட்டல்,தாக்குதல், உட்பட 5 பிரிவின்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.