கோவை: தமிழ்நாட்டில் 24 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகளுக்கு போலீஸ் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில் கோவை மாநகர போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனராக அசோக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்இவர் இதற்கு முன் கடலூர் மாவட்ட ( தலைமையிடம்) போலீஸ் கூடுதல் சூப்பிரண்டாக இருந்து வந்தார். கோவை பிரிவு ஐகோர்ட்டு (ஜூடிசியல்) ஊழல் கண்காணிப்பு கூடுதல் சிறப்பு சூப்பிரண்டாகஇருந்த மணிகண்டன் சென்னை லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாகவும், கோவை மாவட்ட தலைமையக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முத்துக்குமார் சென்னை புளியந்தோப்பு துணை கமிஷனராகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0