திருச்சியில் செல்லப் பிராணிகளுக்கான பிரம்மாண்ட அதிநவீன மருத்துவமனை – அருண்நேரு திறந்து வைத்தார்..!

திருச்சியில் செல்லப் பிராணிகளுக்கான அதிநவீன மருத்துவமனை.
திருச்சி சாஸ்திரி ரோடு , தில்லை நகர் 7 வது கிராஸ் வடகிழக்கு விரிவாக்க பகுதியில் புதிதாக FURRY GENIUS என்ற பெயரில் செல்ல வளர்ப்பு பிராணிகளுக்கான பிரம்மாண்டமான அதிநவீன மருத்துவமனையை தொழிலதிபர் கே .என். அருண் நேரு திறந்து வைத்தார் .
கால்நடை மருத்துவத் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் பிரசன்ன குமார், சிரஞ்சீவிகுமார், சிவச்சந்திரன் ஆகியோர் முயற்சியில் தொடங்கப்பட்டுள்ள இம் மருத்துவமனையில் செல்லப் பிராணிகளின் முழு உடல் பரிசோதனை, உடல் உறுப்புகள் பரிசோதனை, டிஜிட்டல் எக்ஸ்ரே, அறுவை சிகிச்சை அரங்கம், பல் ,கண் பரிசோதனை பிரிவு மற்றும் முடி பராமரிப்புக்கான ஸ்பா ஆகியவை மட்டுமல்லாமல் இரத்த பரிசோதனை, தடுப்பூசி ஆகிய வசதிகளும் உள்ளது.
மேலும் இது குறித்து மருத்துவர்கள் கூறும்போது:- செல்ல பிராணிகளுக்காக சிறப்பு பயிற்சிகள் வழங்குகிறோம். இரண்டு அறுவை சிகிச்சை அரங்கம் உள்ளதால் ஒரே நேரத்தில் 20 பிராணிகள் வரை அறுவை சிகிச்சை செய்து தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு செய்ய முடியும். வெளியூர் செல்பவர்கள் தங்களது செல்லப் பிராணிகளை (நாய் ,பூனை ) ஒப்படைத்துச் செல்லும் Boarding Acamsdation வசதி 20 பிராணிகள் அளவுக்கு செய்துள்ளோம் .முற்றிலும் குளிரூட்டப்பட்ட இம் மருத்துவமனையில் அனைத்து விதமான உணவுகள், மருந்துகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களும் விற்பனை செய்கிறோம். கேரளா ,சிவகாசி, கும்பகோணம், திருச்சி பாலக்கரை அடுத்து இது எங்களது ஐந்தாவது மருத்துவமனையாகும். இங்கு அனைத்து பிராணிகளுக்கும் தேவையானவற்றை பூர்த்தி செய்யும் ஒரு முழு மருத்துவமனையாகும் என்றும் தெரிவித்தனர்.