திருச்சியில் டாக்டர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா
திருச்சி கிழக்கு மாநகர தி.மு.க. சார்பில் திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கை கவிஞர் கவிப்பேரசுவைரமுத்து தொடங்கி வைத்தார். மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கருணாநிதியின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி கிழக்கு மாநகர தி.மு.க. சார்பில் கலைஞரின் புகழ் பாடும் கருத்தரங்கம் இன்று திருச்சி கரூர் பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. கருத்தரங்கில் மாநகரகழக செயலாளர் மு.மதிவாணன் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிக்கு பள்ளி கல்வித்துறை – அமைச்சரும், தெற்கு மாவட்ட தி.மு.க. -செயலாளருமான அன்பில் – மகேஸ் பொய்யாமொழி
தலைமையில். கருத்தரங்கை கவிஞர் கவிப்பேரரசு வைரமுத்து தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார் கருத்தரங்கில்
அரசியலில் கலைஞர் என்ற தலைப்பில் தி.மு.க. தமிழ்நாடு – சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர்அல்போன்ஸ், கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில பொதுச் செயலாளர். தோழர் மகேந்திரன் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் சிந்தனை செல்வன்,ம.தி.மு.க. மாநில பொருளாளர் செந்திலதிபன். மனிதநேய மக்கள் கட்சி மாநில பொது செயலாளர் அப்துல் சமது சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் சொற்பொழி வாற்றினர்.
நிகழ்வின் இறுதியில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் நன்றி கூறினார். கருத்தரங்கில் திருச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள், மாநகர தி.மு.க. (கிழக்கு) நிர்வாகிகள் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0