ஆவடி:செப். 15- சென்னை மற்றும் ஆவடி காவல்துறை தாம்பரம் காவல்துறை பொது மக்களே உஷார் உஷார் என எச்சரிக்கை விடுத்தாலும் முட்டாள் தமிழக மக்கள் திருந்தவே மாட்டார்கள். என்ன செய்வது உஷார் ரிப்போர்ட்டை இப்போது பார்ப்போமா? ஆவடி காவல் ஆணையரகத்தில் மத்திய குற்ற பிரிவில் 2022ம் வருடம் ரகு என்பவர் கொடுத்த புகார் மனுவில் ஜேகே என்ற சினிமா தனியார் நிறுவனத்தை துவங்கிய கேடிகளும் அவனது கூட்டாளிகளும் ரகுவிற்கும் அவரது நண்பர்களுக்கும் வேலை வாங்கித் தருவதாக போலியான அனுமதி காப்பி நகல்களை கொடுத்து ரூபாய் 62 லட்சத்தை வங்கி பரிவர்த்தனை மற்றும் ரொக்கமாக கேடி கார்த்திகேயன் மற்றும் அவனது கூட்டாளிகள் பெற்றுக்கொண்டு நம்பிக்கை மோசடி செய்த வழக்கில் கேடி கார்த்திகேயன் என்பவன் 13.3.2023ம் தேதி யன்று கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டான். இதனைத் தொடர்ந்து கேடி கார்த்திகேயன் என்பவன் கோயம்புத்தூரில் அமேசான் டிரேடர்ஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றைத் துவங்கி அதில் தினசரி வாராந்திர மாதாந்திர திட்டங்கள் இருப்பதாகவும் அதில் பணத்தை முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று கோயம்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அப்பாவி பொதுமக்களிடம் ரூபாய் 61 லட்சத்து 79 ஆயிரத்தை கேடி கார்த்திகேயன் மற்றும் அவனது கூட்டாளிகள் சேர்ந்து பணத்தை வாங்கிக் கொண்டு பொதுமக்களை ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் ஆஜர் படுத்தப்பட்டான். மேலும்2018ம் வருடம் ஐ சி எப் பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் என்பவரிடம் அவரது மனைவி அனுராதா என்பவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி ரூபாய் 5 லட்சத்தை வங்கி பரிவர்த்தனை மூலம் பணத்தை வாங்கிக் கொண்டு மோசடி செய்த வழக்கில் ஐ சி எஃப் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக 2021ம் வருடத்தில் ரேணுகா தேவியின் உறவினர் கண்ணன் என்பவருக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூபாய் 5 லட்சத்தை பணமாக பெற்றுக் கொண்டும் ரேணுகா தேவியின் கணவர் கத்தாரில் வேலை பார்த்து வருவதால் இவரிடம் அரசு கேண்டின்களில் டெண்டர் எடுத்து தருவதாகவும் என் ஒய் எஸ் சி என்ற நியூயார்க் எக்சேஞ்ச் என்ற ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் பணத்தை முதலீடு செய்து அதிக லாபம் ஈட்டி தருவதாக மூளை சலவை செய்து ரூபாய் 94 லட்சத்து 50 ஆயிரம் வரை ஏமாற்றி நம்பிக்கை மோசடி செய்துள்ளான். மேலே குறிப்பிட்ட குற்றவாளி தொடர்ந்து படித்துவிட்டு வேலை தேடி வரும் இளைஞர் களை வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி பணம் பெற்றும் அப்பாவி பொதுமக்களை அதிக லாபம் தருவதாக கூறி பணத்தை முதலீடு செய்ய வைத்து கோடிக்கணக்கில் பணத்தை ஏமாற்றியதால் கேடி கார்த்திகேயன் வயது 33. தகப்பனார் பெயர் கந்தசாமி. 11 வது தெரு பாலாஜி நகர் ஆதம்பாக்கம் சென்னை.என்பவனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளான். ஆவடி போலீஸ் கமிஷனர் கி. சங்கர் மத்திய குற்ற பிரிவு துணை ஆணையர் பி. பெருமாள் ஆகியோரது உத்தரவின் பேரில் சிறப்பாக செயல்பட்ட காவல் ஆய்வாளர்ஆ. ஆல் பின பிரிஜ் ட் மேரி மற்றும் அவரது அணியையும் காவல் ஆணையாளர் வெகுவாக பாராட்டினார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0