சற்றுமுன்: சீமான் மீது கைது நடவடிக்கை . ஈரோடு கிழக்கு தொகுதியில் தொடர் பரபரப்பு!!
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தேர்தல் நடைபெற போவதையொட்டி அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ள நிலையில் சீமான் தற்பொழுது சர்ச்சைக்குரிய விதமாக பேசி பெரிய சிக்கலில் மாட்டி உள்ளார்.அந்த வகையில் தனது வேட்பாளரை ஆதரவளித்து பேசுகையில், அருந்ததியர் என்றாலே தெலுங்கு வந்தேறிகள் தான் என கூறியது தற்பொழுது பூதாகரமாக வெடித்துள்ளது.
முதலியார்கள் என்றால் உங்களுக்கு யார் என்று தெரியுமா? அதாவது முதலியார்கள் தான் முதலில் அரசகுலத்திற்கு பட்டாடை நெய்து கொடுத்து வந்தவர்கள், அது மட்டுமின்றி போர் என்று கூறினால் இவர்கள்தான் செவ்வேள் ஏந்தி கலத்துக்கும் முதலாவது ஆளாக வருபவர்கள் எனவே அவர்களை முதலியார்கள் என்று அழைத்தனர்.
இவ்வாறு தமிழ் குடிகள் தூய்மை பணியில் இருந்த பட்சத்தில் விஜயநகர பேரரசு வந்த பொழுதும் நீங்கள் தூய்மை பணி செய்ய வேண்டும் என்று கூறியதற்கு வேற ஆளைப் பாரு என்று தமிழ் குடிகள் கூறிவிட்டனர். எனவே விஜயநகர பேரரசானது அங்கிருந்த ஆதிகுடிகளை இங்கு கொண்டு வந்து அருந்ததியர்களாக மாற்றி தூய்மை பணியில் ஈடுபட வைத்தது. எனவே அருந்ததியர்கள் அனைவரும் தெலுங்கு வந்தேறிகள் என சீமான் கடுமையாக விமர்சனம் செய்தார்.
இதனையடுத்து பலரும் இவ்வாறு அவர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், அருந்ததியர்கள் உள்ள வார்டுக்கு வாக்கு கேட்க சென்ற பொழுது திமுக மற்றும் நாம் தமிழர் கட்சிக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. மேலும் இன்று திருநகர் காலனியில் உள்ள மக்கள் அனைவரும் அருந்ததியர்களை அவதூறாக பேசியது குறித்து சீமானை கைது செய்யும் படி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சாலை மறியல் போராட்டம் சீமானை கைது செய்தால் மட்டுமே கைவிடப்படும் என்பதில் தீர்க்கமாக உள்ளதால் அவர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இவர் அங்குள்ள சாதிய வாக்குக்களை கவர இவ்வாறு பேசியதால் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த வேறுபாட்டால் கட்டாயம் நாம் தமிழர் கட்சி பின்னடைவை சந்திக்கும் என கூறுகின்றனர்.