கோவை; நெல்லை கோர்ட்டு முன்பு கடந்த 20ஆம் தேதி நெல்லை கீழநத்தம், மேலூரை சேர்ந்த மாயாண்டி என்ற வாலிபரை ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்தது இந்த கொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பு ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்த வேண்டும் .துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்த வேண்டும் என்று அனைத்து மாவட்ட போலீஸ் கமிஷனர்கள் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு களுக்கு தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் நேற்று உத்தரவு பிறப்பித்தார். டி.ஜி.பி.யின் இந்த உத்தரவை தொடர்ந்து நேற்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர் .கோவை அரசு கலைக்கல்லூரி ரோட்டில் உள்ள கோர்ட்டின் மெயின் கேட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் குவிக்கப்பட்டு ள்ளனர் அது தவிர கேட்டுகளிலும் ஆயுதப்படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:- ஏற்கனவே ஒரு சப் இன்ஸ்பெக்டர் உட்பட 16 போலீசார் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டு இருந்தனர். தற்போது கூடுதலாக ஒரு சப் இன்ஸ்பெக்டர் 3 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் 20 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். இவர்களில் 2 பேருக்கும் நவீன ரக துப்பாக்கி வழங்கப் பட்டு ள்ளது. கோர்ட்டுக்கு வருபவர்கள் சோதனை செய்யப்பட்டு உள்ளே அனுப்பப் படுகிறார்கள் .அவர்களது உடைமைகளும் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. அதன்படி தீவிர சோதனைக்குப் பின்னரே பொதுமக்கள் கோர்ட் ஊழியர்கள் உள்ளே அனுமதிக்கப் படுகிறார்கள். இதேபோல பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், மதுக்கரை வால்பாறை ,சூலூர் அன்னூர் ஆகிய கோர்ட்டுகளிலும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்தி கேயன் உத்தரவின்பேரில் சப் இன்ஸ்பெக்டர் தலைமையில் 3 துப்பாக்கி ஏந்திய போலீசார் என மொத்தம் 27 போலீசார் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0