கோவை: கே.ஜி. சாவடி அருகே உள்ள மாவுத்தம் பதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். இவரது மனைவி சித்ரா (வயது 35) இவர்களுக்கு திருமணம் ஆகி 18 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து சித்ரா 2019 முதல் அசோக் என்பவருடன் வசித்து வந்தார். இவர்கள் இருவரும் குடிப்பழக்கம் உடையவர்கள். நேற்று குடித்துவிட்டு அசோக்குடன் சித்ரா தகராறு செய்தாராம். பின்னர் அவரது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அதே இடத்தில்உடல் கருகி இறந்தார். இது குறித்து கே.ஜி . போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
What’s your reaction?
Love0
Sad0
Happy0
Sleepy0
Angry0
Dead0
Wink0